Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை மாநகர சபையால் அறவிடப்படும் குப்பை வரியை நிறுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கல்முனை மேயரிடம் வேண்டுகோள்!



( றம்ஸீன் முஹம்மத் )

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில்  அறவிடப்படும் திண்மக்கழிவு ( குப்பைவரி)  வரியை நிறுத்தி வைக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை  மாநகர சபை முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் கொவிட் 19 தொற்று நோய் ஏற்பட்ட பின்பு குறிப்பாக மாநகர சபை பிரதேசத்தில் வாழும் மக்கள் பாரிய சிரமத்திற்கும்,  கஷ்டத்துக்கும், உள்ளாகியுள்ளனர். 

ஆயிரக்கணக்கானோர் தொழில்களை இழந்து வருமான மின்றி கஷ்டப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் பொது மக்களால் இவ் வரியினை செலுத்துவது கஷ்டமாகயுள்ளது. 

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த வரியை   நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு   கேட்டுக் கொள்வதாக கல்முனை மாநகர சபை முதல்வரிடம் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments