Home » » கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு


( றம்ஸீன் மொஹமட் )

கொரணா வைரசு தாக்கம் காரணமாக மரணம் அடைந்தவர்களை அவரவர் மத முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரி கல்முனை மாநகர சபையின் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம். அஸீம்  அவர்களால் முன்வைக்கப்பட்ட  தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது
 கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை முற்பகல் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில்  இடம்பெற்றது.
சபையின்  இறுதி கட்ட நிகழ்வில் போது திடீரென எழுந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர“ ஏ.ஆர்.எம்.அஸீம் சில கருத்துக்களை தெரிவித்தார்.
  கடந்த காலங்களில் கொரணா வைரசு தாக்கம் காரணமாக மரணம் அடைந்தவர்களின் சடலங்கள் அவரவர் மத உரிமையை மீறி  நல்லடக்கம்  செய்யப்படாமல் எரிக்கப்பட்டிருப்பது இருப்பது  கண்டு பெரும்  மனவேதனை அடைகின்றோம் அது போலவே ஏனைய உறுப்பினர்களும் கவலைப்படுகின்றனர்

 கொரணா வைரசு தாக்கம் காரணமாக மரணம் அடைந்தவர்களை அவரவர் மத படி அடக்கம் செய்ய அரசாங்கத்துடன் வேண்டிய விசேட பிரேரணையை சபையின் கௌரவ உறுப்பினர்கள் அனைவரினதும் சம்மதத்துடன்  நிறைவேற்றுமாறு விசேட பிரேரணையை முன் தற்போது முன் வைக்கிறேன்  இதற்கு   இன மத கட்சி உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை  முன் வைக்கும் போது மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப்   குறித்த தீர்மானத்தை  ஆமோதிக்க  ஏனைய உறுப்பினர்களும்  வழிமொழிய  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

அத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாட்டின் ஜனாதிபதி  , பிரதமர்  , சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக மாநகர முதல்வர்  சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்து சபை நடவடிக்கைகளை  முடிவுக்கு கொண்டு  வந்தார் 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |