இலங்கையின் உற்சாகமான பெண்கள் நாட்டின் பொருளாதாரத்தின் பங்குதாரராவதற்கு தமது இல்ல பொருளாதாரத்தின் செயற்பாட்டில் அங்கத்தவராக்கும் ” உற்சாக அறுவடை ” என்ற பெயரில் வீட்டுத் தோட்டத்திில் தமக்கு தேவையான மரக்கறிகளையும் , பலன் தரும் மரங்களையும் பயிரிடும் ஊக்குவிக்கும் திட்டம் அண்மையில் முன்னாள் அமைச்சரும் தயா குறூப் நிறுவனத்தின் தலைவருமான தயா கமகே மற்றும் முன்னாள் பெற்றோலிய வள பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோரால் அம்பாறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
100 மில்லியன் பயிர் கன்றுகள் வீட்டுத் தோட்டத்தில் புதிதாக சேர்த்தக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட பெண்களுக்கு 10 வகை மரக்கறி விதைப் பொதிகள் இவர்களால் அண்மையில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
0 comments: