Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்


(  அஸ்ஹர் இப்றாஹிம் )

அதி மேதகு  ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஸ அவர்களின்  எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்' அமைக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னோடியாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் டீ.எம்.எல்.பண்டாரநாயகவின் பணப்புரையின் பேரில் மாவட்ட செயலக வளாகத்தில் தோட்டம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதில் மாவட்ட செயலக உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தமது வழமையான பொது மக்கள் சேவைக்கு மேலதிகமாக தோட்டம் அமைக்கும் பணிகளில்  ஈடுபட்டு வருகின்னர்.
2 ஹெக்டேயருக்கும் அதிகமான மாவட்ட செயலக  வளாகத்தில் செயற்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு தேவையான தொழிற்நுட்ப உதவிகளையும் பயிர் விதைளையும் , மரக்கன்றுகளையும் விவசாய திணைக்களம் வழங்கி வருகின்றது.


Post a Comment

0 Comments