மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் வியாபாரத்திற்காக வெள்ளரிப்பழம் ஏற்றிவந்த முச்சக்கர வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியும் ஏற்றிவந்த பழங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிரான்குளத்தில் இருந்து வியாபாரத்திற்காக வெள்ளரிப்பழங்களை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருக்கையில் முச்சக்கர வண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேற்படி விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
அத்துடன் ஏற்றிவந்த இருபதாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியான வெள்ளரிப்பழங்கள் வீதியில் சிதறுண்டும், நசிபட்டும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

0 comments: