Advertisement

Responsive Advertisement

கொரோனா நிதியத்திற்கு விருப்பமற்ற கல்வித்துறை உத்தியோகத்தர்களிடம் கிழக்கில் பணம் அறவிடவேண்டாம் - கிழக்கு கல்வி செயலாளர் -


கிழக்கு மாகாண பாடசாலைகளிலும் கல்வி அலுவலகங்களிலும் கடமைபுரியும் உத்தியோகத்தர்களிடமும் அவர்களது எழுத்து மூல விருப்பம் இன்றி ஒரு நாள் சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு
அறவிடவேண்டாம் எனகிழக்கு மாகாண கல்வி அமைச்சின்செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துஉள்ளார்.

இதனை அடுத்து கிழக்கு மாகாண கல்வி
பணிப்பாளர், வலயக் கல்வி பணிப்பாளர்
களுக்கு குறுஞ்செய்தி மூலம் விருப்பம்
அல்லாதோரின் பணத்தை மீள வழங்கு
மாறும் விருப்பம் உடையவர்களிடமிருந்து
மட்டும் பணத்தை அறவிடுமாறும் கேட்டு
உள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்
அதிபர், ஆசிர்களிடம் பலவந்தப்படுத்தி
பணம் அறவிடுகிறார் என இலங்கை
ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சு, கிழக்கு
ஆளுனர், பிரதம செயலாளரது கவனத்தி
ற்கு கொண்டு வந்ததையடுத்து இந்நடவடி
க்களை எடுக்கப்பட்டதாக இ.ஆ.ச.செயலர்
ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆனால் மட்டக்களப்பு கல்வி வலயம் ஆசிரியர்களின் அனுமதியின்றி ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை அறவிட்டுள்ளனர்

அரச உத்தியோகத்தர்களின் அனுமதி இன்றி எந்த ஒரு அதிபரும் எந்த ஒரு பணத்தையும் தங்களின் விருப்பத்தின் பிரகாரம் கையாளக்கூடாது.
சட்டப்படி குற்றம்.
மனித உரிமை மீறல் அமைப்பினரின் கண்டிப்பான கவனத்திற்கு.
இந்தமாதம் ஒருநாளையச் சம்பளமும்.
அடுத்தமாதம் ஒருகிழமைக்குரிய சம்பளத்தை முழுமையாக வெட்டி எடுக்க ஒத்திகை பார்ப்பதாக உள்ளது.
அதிபர்கள் சிங்கள அதிகாரிகளுக்கு வால்பிடிக்க ஆசிரியர்களும் உத்தியோகத்தர்களும் பலிக்கேடாக ஆகக்கூடாது.

உத்தியோகத்தர்கள் தங்களின் தேவைநிமித்தம் வங்கிகளில் கடன் பெற்று மாதாமாதம் சிறுதொகையான மீதிப்பணத்தினைப் பெறுபவர்களாக உள்ளார்கள்.

மனிதாபிமானம் என்றாலும்
So ஒவ்வொரு உத்தியோகத்தரினதும் அனுமதி அவசியம் அது அவர்களின் தனி உரிமை.

இப்பதிவு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரசதிணைக்கள உயரதிகாரிகளுக்கும்பொருந்தும்

Post a Comment

0 Comments