Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொக்கட்டிச்சோலை பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் பலி!!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலபோட்டமடு ஆற்றுப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் ஆடு மேய்த்த ஆற்று பகுதியில் கடும் மழை பெய்திருந்ததால் அப்பகுதியில் காணப்பட்ட பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்ததாகவும் அதில் விழுந்தே குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

முதலைக்குடா பகுதியை சேர்ந்த 19 வயதையுடைய தியாகராஜா கேதீஸ்வரன் எனும் இளைஞன் காளபோட்டமடு ஆற்றுப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை ஆடு மேய்க்கச் சென்றிருந்தபோது குறித்த ஆற்றுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இறப்பு தொடர்பான மேலதிக விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments