Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பலமானது சுமந்திரனின் வெற்றிக்கான திருட்டுத் திட்டம் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் கூட்டணியாம்!



அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எம்.ஏ.சுமந்திரனின் வெற்றியை உறுதிப்படுத்தவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் அதிகாரி ஒருவரின் கூட்டிணைவில் சதிவலையொன்று பின்னபட்டிருக்கின்றது.

அந்த சதிவலையின் பிரகாரம் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகராக தமக்கு சாதகமான ஒருவரை அமர்த்துவது அவ்வாறு அமர்த்துவதற்கு கால அவகாசம் போதாமலிருந்தால் ஈற்றில் உதவித் தேர்தல் ஆணையாளர் சி.அச்சுதனை களமிறக்குவது என்பதாகும்.

இதற்காக, எவ்விதமான அரசியல் கலப்பின்றி செயற்பட்டு வரும் மாவட்ட செயலாளர் கே.மகேசனை அப்பதவியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் அரசியல்வாதிக்கு சார்பாக நிவாரணத்தை வழங்கினார் என்று குற்றம் சாட்டி ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தி அதன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் மற்றும் சி.அச்சுதன் ஆகியோர் திரைமறைவில் காய்களை நகர்த்தியுள்ளனர். இந்த திட்டவுருவரைவின் மேலதிக விடயங்கள் அடுத்த பதிவில் வெளிவரும்.  

Post a Comment

0 Comments