Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பில் இயல்பு நிலை

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளதுடன் மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக இன்று வர்த்தக நிலையங்களில் சனக்கூட்டம் குறைவானளவிலேயே காணப்பட்டதுடன் சுகாதார நடைமுறைகளை பேணிய வகையில் மக்கள் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரும், படையினரும் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதுடன், முககவசம் அணியாதவர்களுக்கு அதனை அணியவைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments