Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் முதல் தடவையாக புத்தர் சிலைகள் எரிப்பு

ஸ்ரீலங்காவில் முதல் தடவையாக புத்தர் சிலைகள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
வீடுகளிலும், தெருக்கள் ஓரமாக உள்ள அரச மரத்தடிகளிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த புத்தர் சிலைகளே இவ்வாறு சேகரிக்கப்பட்டு தீயில் சுட்டு எரிக்கப்பட்டன.
இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய போதிராஜ தர்ம நிலையத்தில் இலங்கையின் பிரதான சங்கத் தலைவராகிய கலாநிதி ஓமல்பே சோபித்த தேரரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இவ்வாறு புத்தர் சிலைகளை மக்கள் இல்லாத இடங்களில், தெருக்கள் ஓரமாக மரத்தடிகளில் கைவிடப்பட்டுச் செல்வதால் பௌத்த மதத்திற்கே பேரவமானம் ஏற்படுவதாக ஓமல்பே சோபித்த தேரர் கவலை வெளியிட்டார்.

Post a Comment

0 Comments