ஏ9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றில் ஆண்னொருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் தகவல்களுக்கு அமைய மேற்படி சடலமானது பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், செம்மணி ஏ9 பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
வீதியோரமாக உள்ள அரச மரமொன்றில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.
கள்ளியங்காட்டை சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சாவகச்சேரியில் புகைப்பரிசோதனை நிலையமொன்றில் பணிபுரிபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது தற்கொலையா, கொலையா என்பது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments