Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பிலிருந்து நாட்டின் 6 பிரதான நகரங்களுக்கான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

(ஏறாவூர் நிருபர் எம்ஜிஏ நாஸர்)
கடந்த சுமார் இரண்டு மாதகாலத்தின் பின்னர் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் , காலி மற்றும் பதுளை உள்ளிட்ட நாட்டின் ஆறு பிரதான நகரங்களுக்கான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதனால் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் ஆசனப்பதிவுகளில் ஈடுபட்டதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் எம். கிருஷ்ணராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான பஸ் வண்டிகள் புறப்படுகின்றன.

 இதே நேரத்திலேயே பதுளைக்கான பஸ் வண்டி காத்தான்குடி நகரிலிருந்து புறப்படும். காலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கான பஸ் வண்டியும் 6.45 மணிக்கு நிட்டம்புவ மற்றும் பாணந்துறை ஆகிய நகரங்களுக்கான பஸ் வண்டியும் புறப்படுகின்றன.

குறிப்பாக காலி நகருக்கான பஸ் வண்டி காலை 6 மணிக்கு பாசிக்குடா பிரதேசத்திலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, பொத்துவில், சியம்பலாந்துவ, மொனராகல மார்க்கமாக பயணிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனியார் பஸ் வண்டிகளும் தூர இடங்களுக்கான சேவைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த பஸ் வண்டிகளில் பயணம் செய்வோர் கொரொனா தடுப்பிற்காக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments