கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியால், உலகெங்கும் ஆறு கோடி மக்கள் மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவரென உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது:,
உலக வங்கி மூலம் தற்போது, 100 நாடுகளில் உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கானவர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்; பட்டினிச் சாவுகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடியால், நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வறுமை ஒழிப்பில் பெறப்பட்ட நற்பலன்கள் அனைத்தையும் இழந்து விட்டோம். கொரோனாவால் உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள், தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்.
இதனால், அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் நாடுகளில் அடுத்த 15 மாதங்களுக்கு, 16,000 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடத் திட்டமிட்டுள்ளோம். அரசுகளும் அமைப்புகளும் பகைமையை மறந்து வறுமை ஒழிப்பில் தீவிரமாக செயல்பட வேண்டிய காலம் இதுவாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: