Home » » ஸ்ரீலங்கா மேலும் முடக்கப்படுமா? இன்று வெளிவரும் விசேட அறிவித்தல்

ஸ்ரீலங்கா மேலும் முடக்கப்படுமா? இன்று வெளிவரும் விசேட அறிவித்தல்

நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.
நேற்று மட்டும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருந்தனர்.
அதிலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இன்று காலை பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் தளபதி ஆகியோரை சந்திக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடல் நடத்த உள்ளனர்.

இதன்பின் ஊரடங்கு தொடர்பான விசேட அறிவித்தல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு 27ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதல் கொரோனாவின் தாக்கம் சடுதியாக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையிலேயே ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |