Home » » சாய்ந்தமருது கடல்பரப்பில் ஆழ்கடல் இயந்திரப்படகு சேதத்திற்குள்ளானதால் மயிரிழையில் உயிர் தப்பிய மீனவர்கள்.

சாய்ந்தமருது கடல்பரப்பில் ஆழ்கடல் இயந்திரப்படகு சேதத்திற்குள்ளானதால் மயிரிழையில் உயிர் தப்பிய மீனவர்கள்.


( .அஸ்ஹர் இப்றாஹிம் , எம்.எம்.ஜெஸ்மின் )

கடந்த திங்கட் கிழமை அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதனை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக ஆழ்கடலில் இயந்திரப்படகு மூலம் மீன் பிடி தொழிலில் ஈடுபடாமலிருந்த மீனவர்கள் காலையைில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாலை 4.30 மணியளவில் பிடிக்கப்பட்ட மீன்களுடன் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது தரையை அண்மித்த வேளையில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இயந்திரத்தின் இயக்கம் நிறுத்தப்பட திடீரென்று ஏற்பட்ட பாரிய அலையின் வேகம் காரணமாக இயந்திரப்படகு  தரைக்கு அடித்திச் செல்லப்பட்ட வேளையில் படகில் பயணித்த மீனவர்கள் கரையில் நின்று கொண்டிருந்த கல்முனைக்குடி , மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது பிரதேச மீனவர்களால் காப்பற்றப்பட்டனர் . இதனால் ஒரு சில மீனவர்கள் காயமடைந்ததுடன் , இயந்திரப்படகு பகுதியாக சேதமடைந்தது.


இவ்விடயம் தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கு பிரதேச மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோரின் உதவியுடன் பாரிய  பாரம் தூக்கி இயந்திரம் வரவழைக்கப்பட்டதானால்  இயந்திரப்படகு  பாரிய சேதத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது.    
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |