Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மேலும் அதிகரித்த கொரோனா தொற்று: முழுமையாக முடக்கப்பட்ட பகுதி

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களது எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 98 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
இதேவேளை கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் சற்றுமுன் முழுமையாக முடக்கப்பட்டன.

அப்பகுதியில் இருந்து தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மேலும் 212 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் இன்று தனிமைப்படுத்தலுக்கு அனுப்பபப்படவுள்ளனர்.
அனைவரையும் முகாமுக்கு அனுப்பும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருவதாக அங்கிகருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments