கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது மிரிஹான காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பிசியோதெரபிஸ்ட் என்று அழைக்கப்படும் இயன்மருத்துவர் என அடையாளப்படுத்திய ஒருவர் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை மீறி மாதிவெல வீடமைப்பு தொகுதிக்கு உள்நுழைய முற்பட்டுள்ளார்.
இதன்போது, காவற்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு எதிர்பை வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க காவற்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் மிரிஹான காவல்துறையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments