Home » » அமெரிக்க அரசின் உயர் தொற்று நோய் நிபுணர் மீது கடும் விரக்தியடைந்த ட்ரம்ப்! நடந்தது என்ன?

அமெரிக்க அரசின் உயர் தொற்று நோய் நிபுணர் மீது கடும் விரக்தியடைந்த ட்ரம்ப்! நடந்தது என்ன?

முன்னதாகவே அமெரிக்காவை லாக்டவுன் செய்திருந்தால் கொரோனா வைரஸிலிருந்து அதிக உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு உயர் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி எஸ். பாசி கூறியதால், அவர் மீது கடும் விரக்தி அடைந்த அதிபர் டிரம்ப், வெளிப்படையாக அதை வெளிப்படுத்தி உள்ளார்.
அமெரிக்க அரசின் உயர் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி எஸ். பாசி-யின் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் விரக்தியும் அதிருப்தியும் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அதை வெளிப்படையாக காட்டியுள்ளார்.
குடியரசுக் கட்சி டிஅன்னா லோரெய்னின் வெளியிட்ட டுவிட்டர் பதிவை ட்ரம்ப் ரீடுவிட் செய்துள்ளார்.

லோரெய்னின் வெளியிட்ட ட்வீட்டில்,
"டிரம்ப் முன்பு மருத்துவ நிபுணர்களின் பேச்சைக் கேட்டிருந்தால், அவர் அதிக உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று ஃபாசி இப்போது கூறுகிறார். ஆனால் பிப்ரவரி 29 அன்று இதே ஃபாசி மக்களுக்கு கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் கொரோனாவால் அமெரிக்காவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறிருந்தார். எனவே பாசி வெளியேற வேண்டிய நேரம் என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் இந்தை ரீடுவிட் செய்துள்ளதுடன், அதில்,
"மன்னிக்கவும் போலி செய்தி, இவர்கள் எல்லாம் பேசுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நான் சீனாவை தடை செய்தேன். " என்று கூறினார்.
கொரோனா வைரஸைக் கையாள்வதில் அதிபர் சரியாக செயல்படவில்லை என்று மக்கள் கோபம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் இந்த விவாகரத்தில் சீனாவை நோக்கி அனைவரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.
டிரம்ப் "சீனாவை தடை செய்யவில்லை", ஆனால் பிப்ரவரி 2ம் திகதி முதல் அடுத்த 14 நாட்களில் சீனாவில் இருந்த அமெரிக்கரல்லாத குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களை பிப்ரவரி முதல் அமெரிக்காவிற்கு வருவதை அவர் தடுத்தார்.
அதேநேரம் சீனாவில் இருந்து 40,000 அமெரிக்கர்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட பயணிகள் அவரது உத்தரவுக்கு பின்னர் அமெரிக்காவிற்கு வந்தனர்.
இதுவும் கொரோனா வைரஸ் படுவேகமாக பரவ ஒரு காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |