யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்தவர் என கூறப்படும் சுவிட்சர்லாந்து போதகர் மீண்டும் இலங்கை வந்தால் அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இது தொடர்பான பல செய்திகள்ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ளன.
அவர் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாமல் வேண்டுமென்றே அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் அவருக்கு பிரயாணம் செய்ய அனுமதி கொடுத்தவர்கள் பற்றியும் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், குற்றப்புலனாய்வு விமான நிலைய அதிகாரிகளுக்கு இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
0 comments: