Home » » வவுனியா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு பணிப்பாளர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள வலியுறுத்தல்

வவுனியா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு பணிப்பாளர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள வலியுறுத்தல்

கொரோனா தொற்றிற்கு உள்ளான வவுனியா வைத்தியசாலை ஊழியருடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்பாக வுவனியா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சுவிஸ் போதகரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்ட வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையிலே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுவிஸ்நாட்டை சேர்ந்த போதகருக்கு கோரோனோ வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அரியாலையில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த வடக்கின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் கணேசபுரம் பகுதியை சேர்ந்த நபர் உட்பட சுவிஸ் மதபோதகருடன் நெருங்கி பழகிய 20 பேர் யாழ் காங்கேசன் துறையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த மாதம்23 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வவுனியாவை சேர்ந்த நபருக்கு கொரோனோ வைரஸ் தொற்றியிருப்பது யாழில் நேற்றயதினம் மேற்கோள்ளபட்ட பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டது.
குறித்த நபர் ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்டமையினால் அவருடன் இணைந்து பணியாற்றிய மேலும் சில ஊழியர்களும் கடந்த சில நாட்களாக சுய தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே கொரோனா தொற்றிற்கு உள்ளான வவுனியா வைத்தியசாலை ஊழியருடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்பாக வுவனியா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |