Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்க ஜனாதிபதி எடுத்துள்ள திடீர் தீர்மானம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவிற்கு குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான “நிறைவேற்று ஆணையில்” கையெழுத்திடவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதல் என்று அவர் கூறும் கொரோனா வைரஸை எதிர்கொள்ளவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் இதை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸால் 792,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 42,517 பேர் உியிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments