Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி !!!


( இரா .சயனொளிபவன் )

அக்கரைப்பற்றை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குக்கு உள்ளாகியுள்ளார்

 அண்மையில்  கட்டாரில் இருந்து வருகை தந்த குறித்த நபர் தனிமைபடுத்தபட்டிருந்தார் .

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி இன்று அக்கரைப்பற்று பிரதேசத்தில் இனம் காணப்பட்டார்.
கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த நபர் வெளிநாடு ஒன்றில் மத கடமைகளுக்காக சென்று நாடு திரும்பியவர் .
அண்மையில் இந்தியா சென்றுவந்திருந்த இவருக்கு கொரோனா தொற்றியிருப்பது மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்த பட்டுள்ளது.
இவர் சிகிச்சைக்காக வெலிக்கந்தைக்கு அனுப்பப்படவுள்ளதாக அறியமுடிந்தது.முன்னதாக இவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்று திரும்பியதாகவும் 14 நாட்கள் கழிந்த பின்னரே இவருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தனிமைப்படுத்தல் முடிந்து வீடு திரும்பிய இவர் பலருடன் பழகி இருப்பதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சுகாதார தரப்பு தயாராகி வருகிறது.இவருடன் இந்தியா சென்று திரும்பிய மேலும் 7 பேர் தொடர்பிலும் ஆராயப்படுகிறது.




Post a Comment

0 Comments