Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் இரட்டைக்கொலை செய்த நபருக்கு நீதவான் வழங்கிய உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிச்சேனை பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை கிணற்றினுள் வீசி கொலை செய்த நபரை பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.
மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் அஸிமுல் ஹக் வயது 10, அஸிமுல் தாஹியா வயது 07 ஆகிய இரண்டு குழந்தைகளை அவர்களின் தந்தை நேற்றைய தினம் நள்ளிரவு தனது வீட்டு கிணற்றில் தூக்கி எறிந்து கொலைசெய்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளை கொலை செய்த குற்றத்தில் அவர்களது தந்தையான முகம்மது லெப்பை சுலைமா லெப்பை வயது 46 என்பவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு மரணமடைந்த இரண்டு குழந்தைகளின் சடலங்களும் நேற்றைய தினம் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட்; பஸீலின் உத்தரவிற்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி விசேட விடுமுறையில் உள்ள நிலையில் எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை சடலம் உறவினர்களிடம் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments