Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் குடியிருப்புக்குள் புகுந்த முதலை

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடுவில் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை (15.04.2020) அதிகாலை பாலமீன்மடு, தண்ணிக்கிணற்றடி வீதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த முதலையே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதலை மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து ஆடு,கோழிகளை பிடித்துவந்த நிலையில் இன்று அதிகாலை குடியிருப்புக்குள் வைத்து குறித்த முதலையினை அப்பகுதி இளைஞர்கள் பிடித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இரண்டு முதலைகள் இவ்வாறு பிரதேசத்தில் நடமாடி திரிவதாகவும் ஒன்று பிடிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றையதையும் பிடிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

குறித்த முதலையானது சுமார் 07அடி நீளம் கொண்டதாகவும் காணப்பட்டது.

அப்பகுதிக்கு வந்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி கே.சுரேஸ் தலைமையிலான குழுவினர் குறித்த முதலையினை மீட்டு பாதுகாப்பாக நீர்நிலைக்கு கொண்டுசென்று விடும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

Post a Comment

0 Comments