Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கணவனை கொலைசெய்த பெண் இரு குழந்தைகளுடன் பொலிஸில் சரண்

தோட்ட - யடிவாவல பகுதியில் கணவனை கொலை செய்த பெண் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவரே இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர் கூரிய ஆயுதத்தல் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட நபர் குடிபோதையில் மனைவியுடன் மோதலில் ஈடுபட்ட நிலையிலேயே, கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் குழந்தைகள் இருவரும் பாட்டியின் பொறுப்பில் விடப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments