Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய சஹ்ரான் குழு : விசாரணைகளில் வெளியான பல தகவல்கள்

வனாத்தவில்லு - அரபு பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு சஹ்ரான் குழு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வனாத்தவில்லு - கரதீவில் அமைந்துள்ள அரபு பாடசாலையில் கல்வி கற்ற பாடசாலை மாணவர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளதாக, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவன் ஒருவன் வாக்கு மூலம் வழங்கியுள்ளான்.
இந்த அரபு பாடசாலை 2008ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் இயங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பெற்றோரை இழந்த முஸ்லிம் சிறுவர் சிறுமியர் 35 முதல் 40 சிறுவர் சிறுமியர் கல்வி கற்றுள்ளனர்.
இந்த பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரையில் கற்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments