Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மீது பழிகளை சுமத்த வேண்டாம் - பழுகாமம் சமுர்த்தி வங்கி முகாமையாளர்


உலகையே முடக்கி கோரோனா வைரஸ் வீட்டினுள்ளே அனைவரையும் வைத்துள்ள இந்நிலையில் நமது நாட்டில் பல துறை சார்ந்த அரசாங்க உத்தியோகஸ்தர்களும் தங்களை முழுமையாக அர்ப்பணித்து செயற்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் அரச உத்தியோகஸ்தர்கள் மீது வீண்பழிகளை சுமத்துவது ஏற்புடையதாகாது என பழுகாமம் சமுர்த்தி வங்கி முகாமையாளார் பூ.தவேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழுகாமம் சமுர்த்தி வங்கிச் சங்கத்தினால் ரூபா 5000 பெறுமதியான உலர்உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அப்பொதியில் குறித்த பெறுமதிக்குரிய பொருட்கள் இல்லையெனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பழுகாமம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பூ.தவேந்திரனிடம் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவிய போது,
எமது பழுகாமம் சமுர்த்தி வங்கிக் கிளையினால் பயன்பெறும் எந்தவொரு மக்களுக்கும் உலர்உணவுகள் அடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கவில்லை. இந்த செய்தியானது உண்மைக்குப் புறம்பானது எனவும், மாறாக அரசினால் நிர்ணயிக்கப்பட்ட 5000 ரூபா மானிய பணத்தை மாத்திரமே வழங்கியுள்ளோம்.
எமது பிரதேச செயலாளரின் சிறந்த நிர்வாகத்தின் கீழ் நாம் சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அரச அதிகாரிகள் மீது வெறுமனே வீண்பழிகளை யாரும் சுமத்த வேண்டாம். இந்த தவறான செய்திகளை பரப்பியோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments