Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒரே நாளில் அடுத்தடுத்து செத்து மடியும் காகங்களும், நாய்களும்...

நாகை மாவட்டம் காவேரிபூம்பட்டணம் கிராமத்தில் 50 காகங்கள், 3 நாய்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உயிரிழந்த காகங்களில் உடல்கள் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், இந்த உயிரிழப்புகள் காவேரிபூம்பட்டணம் கிராம மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
அமெரிக்காவில் புலி, சிங்கம் பூனைகளுக்கு எல்லாம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அது தொடர்பான செய்திகள் வெளியாகி உள்ளது.
காகங்களின் உடல்களை சோதனை செய்த பின்னரே உயிரிழந்ததற்கான காரணம் பற்றி கூற முடியும் என நாகை மாவட்ட கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் கூறிவிட்டனர்.
இதனிடையே குறிப்பிட்ட 3 நாய்களுக்கும், காகங்களுக்கும் சமூக விரோதிகள் யாரேனும் விஷம் கலந்த உணவை வைத்தார்களா என்பது பற்றியும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.c

Post a Comment

0 Comments