Home » » நியூயோர்க்கில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

நியூயோர்க்கில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் நியூயோர்க் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. நியூயோர்க்கில் மட்டும் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நியூயோர்க்கில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் நியூயோர்க் விலங்கு சரணாலயம் ஒன்றில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது நியூயோர்க்கில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் மற்றும் புலிகள் இயல்பாக இருப்பதாகவும், உணவு நன்றாக உண்பதாகவும் பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மனிதர்கள் மூலம் விலங்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரான்ஸ் வன உயிரினப் பூங்காவில் சிங்கம், புலிக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |