Home » » கொரோனாவுக்கு தாமதமாக மருத்துவ பரிசோதனைக்கு சென்றால் ஏற்படும் விளைவுகள் என்ன? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனாவுக்கு தாமதமாக மருத்துவ பரிசோதனைக்கு சென்றால் ஏற்படும் விளைவுகள் என்ன? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் தாமதமாக சிகிச்சைப்பெற வருகைதருவதனால், குறித்த நோயாளர்கள் அவதானமிக்க நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் இயன்றளவு விரைவாக சுகாதாரத்துறையினருக்கு அறியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தாமதமாக சிகிச்சைப்பெற வருகைதருவதனால், குறித்த நோயாளர்கள் அவதானமிக்க நிலைமையை எதிர்கொள்ள நேரிடும்.
கொரோனா வைரஸ் காரணமாக முதலாவதாக உயிரிழந்தவர் ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு உட்பட்டிருந்தமை துரதிஸ்டவசமாக அவர் உயிரிழப்பதற்கான காரணமாக அமைந்தது.
2வது மற்றும் 3வதாக உயிரிழந்த இருவரும் மருத்துவமனையில் காலம் கடந்த நிலையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் அதற்கு முன்னர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக சென்றிருந்தனர்.
ஆகவே எவருக்கேனும் நோய் அறிகுறிகள் தென்படுமாக இருப்பின் உடனடியான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் நாட்டில் உயிரிழப்போரின் தொகையை குறைப்பதற்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |