Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மன்னாரில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே பலியான இரு பெண்கள்

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று (9) வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிலும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான சந்தியோகு லிண்டா (வயது-40), மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார்.
மற்றையவர் சந்தியோகு டெரன்சி (வயது-25) மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வருகின்றனர்.


சகோதரிகள் இருவரும் கடமை முடிந்த நிலையில் மன்னாரில் இருந்து கட்டை அடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிலில் பயணித்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இரு பெண்களினதும் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிக்கப் வாகனத்தின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை உயிழங்குளம் மற்றும் மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments