Home » » பீதியில் உலக நாடுகள்! விமானத்திற்கு நீர் விசிறி வரவேற்பளிக்கும் சீனா

பீதியில் உலக நாடுகள்! விமானத்திற்கு நீர் விசிறி வரவேற்பளிக்கும் சீனா

நேற்று நள்ளிரவு சீனாவின் வுஹான் நகர் 76 நாட்களின் பின் lockdown நீக்கப்பட்ட நிலையில் முதல் பயணிகள் விமானம் வுஹான் Tianhe சர்வதேச விமான நிலையத்தில் இன்று (8) காலை தரையிறங்கியது.
இதற்கு நீர் விசிறி (water salute) வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானம் சீனாவில் உள்ள Hangzhou சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
மேலும் அங்கு பஸ், ரயில் சேவைகள், நிறுவனங்கள் பாடசாலைகள் என்பன மீள வழமைக்கு திரும்பியுள்ளன.
சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் உலக நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.

உலகளவில் இதுவரையில் 85000 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |