Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்லடி பிரதான வீதியில் விபத்து!

(சிவா)
மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் இன்று(08) காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் கல்லடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதியத்திலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

கல்லடி கடற்கரைக்கு செல்லும் சந்தியில் ஏற்பட்ட இவ் விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர் காலில் ஏற்பட்ட காயத்தினால் உடனடியாக அம்புயூலன்சில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

ஊரடங்கு காலப்பகுதியில் நடந்த குறித்த விபத்து தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments