Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முச்சக்கரவண்டியில் பொதுமக்கள் பயணிப்பது தொடர்பில் புதிய கட்டுப்பாடு

இலங்கையில் வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதிகளுக்கு மேலதிகமாக இருவர் மாத்திரமே பயணிக்கும் வகையில் புதிய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.
பொது பயணிகள் சேவைகளை செயல்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்கும் வகையில் ஊரடங்கு சட்டம் சில மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், பொது பயணிகள் சேவைகளின் பாதுகாப்பு முறை தொடர்பில் கருத்திற் கொள்ளாமல் செயற்பட்ட சம்பவங்கள் கண்கானிப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments