Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று இரவு மீண்டும் அமுலாகின்றது ஊரடங்கு : ஜனாதிபதி ஊடகப்பிரிவு

இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களுக்கும் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று (28) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.
இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவெளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை மே மாதம் 4 ஆம் திகதி முதல் திறக்கும் வகையில், ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கும், தனியார் பிரிவின் தொழிற்சாலைகள், கட்டட நிர்மாண வர்த்தகங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை வியாபாரங்ளை நடத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு பின்னர், நிறுவனங்களை நடாத்திச்செல்லும் விதம் குறித்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், அடுத்த வாரத்திற்குள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments