Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் மோசமான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த ஸ்ரீலங்கா

கொரோனா பரவல் காலத்தில் ஊரடங்கு சட்டத்தை முறைகேடாக அமுலாக்கிய மோசமான நாடுகளின் பட்டியலில், இலங்கையும் உள்ளடங்கியுள்ளது.
கொரோனா பரவல் காலப் பகுதியில் உலக அளவில் 80 நாடுகள் ஊரடங்கு சட்டத்தை அமுலாக்கியுள்ளன.
அவற்றில் இலங்கை, நைஜீரியா, கென்யா, தென்னாப்பிரிகா, ஃபிலிப்பின்ஸ், எல் சல்வடோர், டொமினிக்கன் குடியரசு, பெரு, ஹொன்டுராஸ், மொரோகோ, கம்போடியா, உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் ஊரடங்கு சட்டத்தை முறைக்கேடாக பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
ஊரடங்கு சட்டத்தின் பின்னர் காவற்துறையினர் செயற்பாடுகள், கைதுகள் போன்ற விடயங்களை மையப்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், கொரோனா பரவல் காலத்தில் ஊரடங்கு சட்டத்தை அமுலாக்குவதன் மூலம், பொதுமக்களை கட்டுப்படுத்தவும், ஆட்சியை நீடித்துக் கொள்ளவும் ஊரடங்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்று, மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்செலெட் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments