Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் அனுமதி மீறி திறக்கப்பட்ட கடைகள் மீது மாநகர முதல்வர் அதிரடி நடவடிக்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில், மாநகரசபையின் அறிவிப்பினை மீறி திறக்கப்பட்ட கடைகள் மூடப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.
இந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பலசரக்கு நிலையங்கள், மருந்து கடைகள், பழங்கள் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.




எனினும் இந்த அனுமதியை மீறி மஞ்சந்தொடுவாய் மற்றும் மட்டக்களப்பு நகரில் திறக்கப்பட்ட கடைகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் மூடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக இந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








   

Post a Comment

0 Comments