Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா விமானப் படை சிப்பாய்க்கும் கொரோனா தொற்று! தற்போது வெளியான தகவல்

ஸ்ரீலங்கா விமானப்படை பாண்ட் பிரிவின் சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சிப்பாய்க்கு கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்றுக்குள்ளான சிப்பாய் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையமொன்றின் நிகழ்ச்சிக்குச் சென்று இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் குறித்தும் சுகாதார பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக கடற்படை, இராணுவம் , பொலிஸ் துறைகளுக்குள்ளும் கொரோனா வைரஸ் தொற்றியிருந்த நிலையில் தற்போது, விமானப்படைக்குள்ளும் பரவ ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில் பொது மக்கள் தொடர்ந்தும் சமூக இடைவெளியினை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments