Advertisement

Responsive Advertisement

தேர்தல் நடைபெறும் தினம் பற்றி தற்போதைக்கு கூற முடியாது! மஹிந்த தேசப்பிரிய


பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் பற்றி தற்போதைக்கு கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இறுதி பத்திரிகையொன்றுக்கு அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தல் நடத்துவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் கடந்த 6ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றமை குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு சாதாரண நிலைமையை அடையும் வரையில் பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து திடமான தினம் எதனையும் குறிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments