Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கப்பட்டனர்!

மருதானை டார்லி வீதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய நால்வருக்கு பிரதான வீதியில் வைத்து தண்டனை வழங்கிய காவல் துறை உத்தியோகத்தர்கள் இருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு டார்லி வீதியில் நேற்று (12) ஊரடங்கு சட்ட அமுலாக்க நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிலரை பிடித்து தோப்புக்கரணம் போடவைத்தனர்.
இது தொடர்பிர், மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சனங்களை முன்வைத்திருந்ததுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், கொழும்பு போக்குவரத்து பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினை மதித்து நடக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments