Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு- தாண்டவன்வெளி பிரதான வீதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள் மோதி கடந்த 20 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் இரு இளஞர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினை சேர்ந்த எஸ்.மதுசன் எனும் 25 வயது  இளைஞன் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


விபத்து நடந்த தினமான அன்று ஊரடங்கின் காரணமாக பூட்டி வைத்திருந்த மதுபான சாலைகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பில் மதுபானங்களை கொள்வனவு செய்வதில் பலர் ஆர்வம் காட்டினர்,

இதனால் மோட்டார் சைக்கிள் போக்குவரத்துக்கள் அதிகமான நிலையில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மதுபான சாலைகள் திறக்கப்பட்ட காரணத்தினால் இவ் விபத்து சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments