நைஜீரிய ஜனாதிபதியின் தலைமை அதிகாரி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார்.
70 வயதான அவர் நீரிழிவு உள்ளிட்ட அடிப்படை உடல்நலக் குறைப்பாடுகளைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு ஆபிரி்க்க நாடான நைஜீரியாவில் 493 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 17 பேர் அங்கு பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: