Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ட்ரம்பின் மிக முட்டாள்தனமான பேச்சைக் கேட்டால் இறந்துவிடுவீர்கள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனாவிலிருந்து குணப்படுவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்து மிக முட்டாள்தனமான, அதேசமயம் மிக ஆபத்தான பரிந்துரை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவைக் குணப்படுத்தும் வகையில் உடலைச் சுத்திகரிக்கும் கிருமிநாசினியை விஞ்ஞானிகள் கண்டறிய முயல வேண்டும் என்று நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது மிக முட்டாள்தனமான, அதேசமயம் மிக ஆபத்தான பரிந்துரை என்று மருத்துவ நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.

“அப்படியொரு கிருமிநாசினி கண்டிபிடிக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அதைக் குடித்தால், அவர் கொரோனாவால் இறப்பதற்கு முன்பே அந்தக் கிருமிநாசினியால் இறந்திருப்பார்’ என்று இங்கிலாந்திலுள்ள யுனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் ஆங்கிலியாவின் மருத்துவப் பேராசிரியர் பால் ஹண்டர் தெரிவித்துள்ளார்.


மேலும், ட்ரம்ப் பேச்சைக் கேட்டு மக்கள் யாரும் கிருமிநாசினியைக் குடித்துவிட வேண்டாம். அது கூடுதல் ஆபத்தை விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகளாவிய அளவில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்குகிறது. 50,372 பேர் இறந்துள்ளனர். 82,843 பேர் குணமாகியுள்ளனர்.

Post a Comment

0 Comments