Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்படி வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கும் புதிய முறை அறிமுகம்

அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரடங்குஅமுலில் இருக்கும் நிலையில் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி அனுமதியளிக்கும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்படுவர்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக  வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதுடன், அவர்கள் வீட்டிலிருந்து நடந்து சென்று கொள்வனவு செய்யக்கூடிய தூரத்திலுள்ள விற்பனை நிலையங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பின்வரும் நாட்களில் கீழ்வரும் ஒழுங்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திங்கள் 
1அல்லது 2
 ஆகிய இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின்  இறுதி இலக்கமாக கொண்டவர்கள்

செவ்வாய் 
3 அல்லது 4 ஆகிய இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக கொண்டவர்கள்

புதன்
5 அல்லது 6 ஆகிய இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக கொண்டவர்கள்

வியாழன்
7 அல்லது 8 ஆகிய இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக கொண்டவர்கள்

வெள்ளி 
9 அல்லது 0 ஆகிய இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக கொண்டவர்கள்

இதேவேளை அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், சமய விழாக்கள் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments