Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தம்புள்ளையில் மர்மப் பெண்! பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தம்புள்ளையில் இன்று புதன்கிழமை காலை கர்ப்பிணிப் பெண் ஒருவரால் சற்று பதற்றநிலை ஏற்பட்டது.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தம்புள்ளையில் கர்ப்பிணிப் பெண் ஒருவரால் சற்று பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பிரதேசங்களுக்கு குறித்த பெண் லொறிகள் மூலம் பிரயாணம் செய்த நிலையில் இறுதியில் தம்புள்ளையில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.

இடைமறித்த பொலிஸார் அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரிடம் எந்தவொரு அடையாள அட்டையோ அல்லது அடையாளத்தை உறுதிசெய்யும் ஆவணமோ இருக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

Post a Comment

0 Comments