Home » » போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம் அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்று ஒரு சிலரது எண்ணம்

போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம் அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்று ஒரு சிலரது எண்ணம்


பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் அனர்த்தத்தில்  மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த சமூக அபிவிருத்திச் சங்கங்கள் பாடசாலை சமூகம் பெற்றோர்களுடன் பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என  அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றமை தொடர்பாக புதன்கிழமை(29) முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் 

கொரோனா  அனர்த்தத்தின்  பின்னர் தற்காலிக பின்னடைவாக சில வாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக எமது  உத்தியோகத்தர்கள்  வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை காணப்பட்டது .எனினும் தற்போது அவை தளர்த்தப்பட்ட   பின்னர் அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானங்கள் போதைவஸ்து பாவனை சம்பந்தமான புதிய தேடுதல் இடம்பெற்று வருகின்றது.

எனது வழிகாட்டலில் பெயரிலும் புதிய உத்வேகத்துடன் இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் இதன் காரணமாக தீர்வை வரி செலுத்த படாத வடி சாராயங்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன. இத்தகைய செயற்பாடுகள்  தெஹித்த கண்டிய ,அம்பாறை, உஹன, நீத்த , பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை பகுதிகளில்   முன்னெடுத்து வருகின்றோம்.எனது நிர்வாகத்தின் கீழ் 2 மதுவரி திணைக்களங்கள் உள்ளன மக்கள் சேவை செய்ய  24 மணி நேரத்தியாலமும் கடமையை நாம்  முன்னெடுத்து வருகின்றோம்

 அந்த நடைமுறையின் பிரகாரம் மக்கள் தகவல் தந்தால்  24 மணித்தியாலத்துக்குள் விரைந்து செயல்பட உதவிகரமாக இருக்கும். அம்பாரை மதுவரி திணைக்கள பொறுத்தளவில் 0632222333 இலக்கமும், கல்முனை மதுவரி திணைக்களத்தை 0672220301   24 மணிநேரமும் செயற்பாட்டில் உள்ளது குறித்த  இலக்கத்திற்கு அழைத்து   தகவல்களை தரும் பட்சத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு உதவிகரமாக அமையும்.சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு மது வரிகள் ஆணையாளர்  உடனடியாக இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதி ஆணையாளர் நாயகம் திஸ்ஸாநாயக்க    உதவிகளை எங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் தகவல்களை தந்த வண்ணம் உள்ளனர். 

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பெருமளவிலான குற்றச்செயல்களை தடுப்பதற்கு காரணமாக அமைந்தது. அதேபோன்று ஊடகங்கள் அவற்றை வெளிக் கொணர்வது மூலம் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என நம்புகின்றேன்.இதுவரையில் கூடுதலாக ஆண்கள் தான் இந்த சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைதாகி இருக்கின்றனர் இதில் ஒரு சில பெண்களும் உள்ளடங்குகின்றனர் பொதுவாக கல்முனை பிராந்தியத்தை  பொறுத்தளவில் சட்டவிரோத  பாவனை கூடுதலாக உள்ள இடமாக அக்கரைப்பற்று  பிரதேசமும்  காணப்படுகிறது.   நாங்கள் திறமையாகச் செயற்பட்டு இதுவரை 17 நபர்களை கைது செய்துள்ளோம் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இப் பிரதேசத்தில் போதைப்பொருள் அதிகரிப்புக்கு காரணம் போதைப்பொருள் பாவனையால் அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்று ஒரு சிலரது எண்ணம் தான் எமது பிரதேசத்தில் அதிக போதை பொருள் பாவனை காரணமாக அமைகின்றது.மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த சமூக அபிவிருத்திச் சங்கங்கள் பாடசாலை சமூகம் பெற்றோர்களுடன் பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைய பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் பிரதிபலனாக கூடியளவு மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் பெற்றோர்களும் பாடசாலை சமூகத்துடனும் ஆசிரியர் சமூகத்துடனும் கூடிய நெருக்கமாக செயற்பட்டதன் விளைவாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கம் பரவுவதை முடிந்தளவு கட்டுப்படுத்த முடிந்தது. மற்றும் சமூகத்தில் உள்ள மாணவர்களுடன் சேர்ந்து நாங்கள் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். இந்த  போதைப்பொருள் பாவனையால் மாணவர்களின் நோய் எதிர்ப்பு  சக்தி குறைந்து அவர்களது திறன்கள்   மழுங்கடிக்கப்படுகிறது.எனவே  இவற்றை நாம் முளையில்  கிள்ளி எறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |