Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாம் நிலைமை குறித்து ஆராய்வு


அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடற்படையினரினால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் முகாம் நிலைமை குறித்து ஆராய்வதற்காக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்று விஜயம் செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தனிமைப்படுத்தல் முகாமிற்கு கொரோனா தொற்று கொண்ட ஐந்து நோயாளர்களுடனும் 75 நேரடி தொடர்பு கொண்ட சந்தேகத்துக்கிடமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் பராமரிக்கப்படுகின்ற நிலைமைகளை சென்று அவதானித்துள்ளனர்.
அத்துடன் இத்தனிமைப்படுத்தல் முகாமிற்கு பொறுப்பாக உள்ள வைத்திய அதிகாரியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போது குறித்த தனிமைப்படுத்தல் முகாமை கடற்படையினருடன் இணைந்து எவ்வாறு
பராமரிப்பது என்பது தொடர்பாக பலதரப்பட்ட தீர்மானங்கள் இவ்விஜயத்தின் போது எடுக்கப்பட்டதுடன் மருந்து வகைகளும் கையளிக்கப்பட்டுள்ளன.
இவ்விஜயத்தில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணனுடன் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments