Home » » கொரோனா ஒழிப்பு பணியிலிருந்த அதிகாரி மீது கத்திக் குத்து! காட்டுக்கு தப்பி ஓடிய சிறுவன்.. தீவிர தேடுதலில் பொலிஸார்

கொரோனா ஒழிப்பு பணியிலிருந்த அதிகாரி மீது கத்திக் குத்து! காட்டுக்கு தப்பி ஓடிய சிறுவன்.. தீவிர தேடுதலில் பொலிஸார்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (04) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அவரது பணிக்கு இடையூறு விளைவித்துள்ள சிறுவன், ஒருவர், அவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பொது சுகாதார அதிகாரி ரம்புக்கணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபரான சிறுவன் தப்பியோடி தற்போது குறித்த பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |