Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்டுள்ள தகவல்

கொரோனா வைரஸ் நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னரே ஊரங்குச் சட்டம் நீக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்;
ஊரடங்கு சட்டம் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுப்பதற்காகவே அமுல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு நாட்டை முழுமை அடைப்புக்கு உட்படுத்த அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்று கமல் குணரத்ன தெரிவித்தார்.
சுகாதாரத்துறையினர், படையினர் உட்பட்டவர்கள் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலைமை சீராகும் அடிப்படையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments