Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மொறட்டுவ எகொடவுயன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!

மொரட்டுவ எகொடவுயன, மோதர, புதியபாலம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான மூவர் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அறியகிடைத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இவர்கள் பாணந்துறை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடையவர்களாவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இருவரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மற்றொருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹெரோயின் போதை பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments